ஜூன் 23 முதல் பிக் பாஸ் 3: அதிகாரபூர்வ அறிவிப்பு!
இந்த வருட நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்கள் கலந்துகொள்ளவுள்ளார்கள்...


விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரு வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராகப் பணியாற்றும் நடிகர் கமல்ஹாசன் முதல்முறையாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள். முதல் வருட நிகழ்ச்சியில் ஆரவும் கடந்த வருட நிகழ்ச்சியில் ரித்விகாவும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டார்கள்.
இந்நிலையில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி, ஜூன் 23 அன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியையும் கமல் ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார். இந்த வருட நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்கள் கலந்துகொள்ளவுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...