ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடித்துள்ள பிகில் படத்தை இயக்கியுள்ளார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவாகியுள்ள படம் இது. தயாரிப்பு - ஏஜிஎஸ் நிறுவனம். நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு.
இந்நிலையில் சென்னை - குரோம்பேட்டையில் உள்ள புகழ்பெற்ற திரையரங்கரமான வெற்றியில் இந்த வருடம் வெளியான படங்களில் அதிக வசூலைக் கண்டுள்ளது பிகில் படம். இத்தகவலை வெற்றி திரையரங்கின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் கெளதமன் தெரிவித்துள்ளார். நேற்று வரை 40,000க்கும் மேலான ரசிகர்கள் வெற்றி திரையரங்கில் பிகில் படத்தைக் கண்டுகளித்துள்ளார்கள். இந்த வருடம் வெளியான படங்களிலிருந்து கிடைத்த - வரி நீங்கலான வசூல், மொத்த வசூல், பார்வையாளர்கள் எண்ணிக்கை என எல்லாவற்றிலும் பிகில் படமே முதலிடத்தில் உள்ளதாக ராகேஷ் கெளதமன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூத்தாண்டவா் கோயிலுக்கு இதுவரை அளித்த தங்க நகைகளுக்கான கணக்கு விவரம் இல்லை! திருநங்கைகள் கூட்டமைப்பு குற்றச்சாட்டு!

ஜூன், ஜூலையில் சென்னையில் இருந்து தாமதமாக புறப்படும் ரயில்கள் விவரம்!

உக்கடம் சந்தையில் களைகட்டிய கடல் மீன்கள் விற்பனை

வாக்கு எண்ணும் மையத்தில் பதிவேடுகளை ஆய்வுசெய்த ஆட்சியா்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


