பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் இந்தப் பிரபல நடிகரின் புதிய சம்பளம் - ரூ. 200 கோடி!

பிக் பாஸின் ஒருநாள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க சல்மான் கானுக்கு ரூ. 8.5 கோடி சம்பளம் வழங்கப்படுவதாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
Updated On :28 நவம்பர் 2019, 5:33 am

ஹிந்தி பிக் பாஸ் 13 தொலைக்காட்சி நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கியது. இந்த வருட நிகழ்ச்சியையும் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். 

இந்நிலையில் பிக் பாஸின் ஒருநாள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க சல்மான் கானுக்கு ரூ. 8.5 கோடி சம்பளம் வழங்கப்படுவதாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பு அவருக்கு ஒருநாள் நிகழ்ச்சிக்கு ரூ. 6.5 கோடி வழங்கப்பட்டதாகவும் தற்போது அவருக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு ஒருநாள் நிகழ்ச்சிக்கு ரூ. 8.5 கோடி வழங்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, ஒரு பிக் பாஸ் சீஸனைத் தொகுத்து வழங்குவதன் மூலம் ரூ. 200 கோடியை சம்பளமாகப் பெறுகிறார் சல்மான் கான். 

ஜனவரியில் முடிவதாக இருந்த இந்த வருட ஹிந்தி பிக் பாஸ், தற்போது 5 வாரங்கள் நீட்டிக்கப்பட்டு பிப்ரவரியில் முடியவுள்ளது. ஆனால், டபாங் 3, ராதே பட வேலைகளால், பிக் பாஸ் நிகழ்ச்சியை அவ்வளவு நாள்கள் தொகுத்து வழங்குவது கடினம் என்று கூறியிருக்கிறார் சல்மான். இந்நிலையில் அவருக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து பணியாற்ற அவர் சம்மதித்துள்ளார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.