பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சசிகுமார், ஜோதிகா நடிக்கும் புதிய படம்: பூஜையுடன் தொடங்கியது!

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி, சூரி, கலையரசன் போன்றோர் நடிக்கிறார்கள்.

News image
Updated On :28 நவம்பர் 2019, 11:06 am

ஜோதிகா நடிப்பில் 2015-ல் 36 வயதினிலே மற்றும் 2017-ல் மகளிர் மட்டும் ஆகிய படங்கள் வெளிவந்தன. அதன்பிறகு கடந்த 2 வருடங்களாகத் தலா 3 படங்களில் நடித்துள்ளார் ஜோதிகா. கடைசியாக ஜாக்பாட் வெளியானது. அடுத்த மாதம் தம்பி வெளிவரவுள்ளது. 

தம்பிக்கு அடுத்ததாக ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படத்தின் படப்பிடிப்பும் நிறைவுபெற்றுவிட்டது. இந்நிலையில் ஜோதிகாவின் புதிய படத்துகான பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றுள்ளது.  

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி, சூரி, கலையரசன் போன்றோர் நடிக்கிறார்கள். இசை - இமான். ஒளிப்பதிவு - வேல்ராஜ். கத்துக்குட்டி படத்தை இயக்கிய ஆர். சரவணன், இப்படத்தை இயக்கவுள்ளார்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள சூர்யாவின் அகரம் நிறுவனத்தின் அலுவலகத்தில் இப்படத்துக்கான பூஜை இன்று நடைபெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.