2013-ம் ஆண்டு கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் யோஹன்: அத்தியாயம் ஒன்று என்ற படத்தில் விஜய் நடிக்கவிருந்தார். இந்தப் படத்துக்கு பூஜை போடப்பட்டு, படத்துக்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கப் போவதாகக் கூட அறிவித்தனர். ஆனால் ஷூட்டிங் தொடங்காமலேயே இந்தப்படம் கிடப்பில் போடப்பட்டது.
இந்த படம் சிஐஏ-வில் பணிபுரியும் ஒரு அமெரிக்க வாழ் இந்தியரைச் சுற்றி பின்னப்பட்டது. மூன்றாம் தலைமுறை என்.ஆர்.ஐ. அமெரிக்க செனட்டராக இருக்கும் அவரது தந்தை, அமெரிக்க மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஆபத்தைக் கண்டுபிடிக்க மகனை இந்தியாவுக்கு அனுப்புகிறார். சுற்றி நடக்கும் க்ரைம் விஷயங்களை புலனாய்வு செய்யும் ஒரு ஸ்பை திரில்லராக இப்படத்தை உருவாக்க கெளதம் வாசுதேவ் மேனன் திட்டமிருந்தார். இந்தப் படத்துக்குப் பின் அடுத்தடுத்து இதன் தொடர்ச்சிகளை உருவாக்கும் திட்டங்களையும் கொண்டிருந்தார். ஒவ்வொன்றும் வெவ்வேறு நகரத்தில் வெவ்வேறு மர்மத்தைச் சுற்றி நடக்கும் கதைகளாக அமைத்திருந்தார். துரதிர்ஷ்டவசமாக இந்த படம் தனது மற்ற படங்களை விட மிகவும் வித்தியாசமாக இருக்கும், தனது ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று விஜய் உணர்ந்தார். கடைசி நேரத்தில் படம் தனது இமேஜிக்கு பொருந்தாது என்று கூறி கைவிட்டார் விஜய்.
எனை நோக்கி பாயும் தோட்டா மற்றும் துருவ நட்சத்திரம் படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில், தனது கனவுப் படமான யோஹன்: அத்யாயம் ஒன்று படத்தை மீண்டும் இயக்கவிருக்கிறார் கெளதம் மேனன். இதில் வருண் ஹீரோவாக நடிக்கிறார். கோலிவுட்டில் துணை நடிகராக இருந்த வருண் அண்மையில் வெளியான பப்பி படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். வேல்ஸ் நிறுவனத்துக்காக கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் இந்தப் படத்துக்கு யோஹன்: அத்தியாயம் ஒன்று என்ற பழைய படப் பெயரே சூட்டப்படுமா அல்லது புதிய பெயர் சூட்டப்படுமா என்று தெரியவில்லை. ஆனால் விஜய் இந்தப் படத்தை கைவிட்ட பின் கெளதம் இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் கதையை தூசி தட்டி எடுத்திருப்பதால் கிடப்பில் இருந்த படம் புத்துயிர் பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை மறியலுக்கு இடையே சென்ற வாகன ஓட்டியை தாக்கிய திமுகவினர்! அமைச்சர் ராஜ்மோகன் பகிர்ந்த காணொலி

சிறையில் அடைத்தால் பேரவையில் பேசமாட்டோமா? ஜாமீனில் விடுதலையான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கேள்வி

கபினியிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் அடிப்பாலாறு வந்தடைந்தது!

பிகாரின் முன்னாள் ஆளுநர் டி. ஒய். பாட்டீல் காலமானார்!
விடியோக்கள்

உதயநிதியை இளைய கலைஞர் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்! | R.S. Bharathi | DMK | TVK



