விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண்
நயன்தாரா நடிக்கும் 65-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


நயன்தாரா நடிக்கும் 65-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரஜினி நடித்த நெற்றிக்கண் படத் தலைப்பின் உரிமையை வாங்கியுள்ள விக்னேஷ் சிவன், அதே தலைப்பில் நயன்தாரா நடிக்கும் படத்தைத் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. நெற்றிக்கண் தலைப்பு உரிமையைத் தந்த கவிதாலயா நிறுவனத்துக்கு விக்னேஷ் சிவன் நன்றி தெரிவித்துள்ளார்.
விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் தயாரிக்கும் நெற்றிக்கண் படத்தை மிலிந்த் ராவ் இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு சித்தார்த் நடித்த அவள் படத்தை இயக்கினார். கதாநாயகி கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டுள்ள இப்படத்துக்கு இசை - கிரிஷ்.


தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...