மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ படத்தைத் தமிழில் ரீமேக் செய்துள்ள ‘சிந்து சமவெளி’ இயக்குநர்!

கொடைக்கானல் அருகில் உள்ள பூம்பாறை எனும் இடத்தில் முழுப்படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது...

News image
Updated On :5 ஏப்ரல் 2019, 2:54 pm IST

உலக சினிமா ரசிகர்களால் மறக்கமுடியாத ஒரு படம் - சில்ட்ரன் ஆஃப் ஹெவன். மஜித் மஜிதி இயக்கிய இந்த ஈரான் படம் இரானில் வாழும் ஒரு ஏழைக் குடும்பத்தின் வாழ்க்கையை உணர்வுபூர்வமான காட்சிகளால் விவரிக்கும். 1998-ல் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.  

இந்தப் படம் விரைவில் தமிழிலும் வெளிவரவுள்ளது. இந்தப் படத்தின் ரீமேக்கை வாங்கி இயக்கியுள்ளார் உயிர், மிருகம், சிந்து சமவெளி படங்களை இயக்கிய சாமி. 

சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் தமிழ் ரீமேக்குக்கு அக்கா குருவி எனப் பெயரிடப்பட்டுள்ளது. கொடைக்கானல் அருகில் உள்ள பூம்பாறை எனும் இடத்தில் முழுப்படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது. அண்ணன், தங்கையின் பாசப்போராட்டத்தை கவிதையான காட்சிகளால் வெளிப்படுத்தும் இந்தப் படம் தமிழ் ரசிகர்களின் மனத்தையும் கொள்ளை கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

அக்கா குருவி படம் மே மாதம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் வெளிவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.