சென்னை: முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்தில் ரஜினியின் கெட்டப் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளதால், முருகதாஸ் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
சர்கார் படத்தையடுத்து ரஜினி நடிக்கும் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார்.
லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10 முதல் மும்பையில் தொடங்கும் என்று அறியப்படுகிறது. 2020 பொங்கல் சமயத்தில் படம் வெளியாகும் என்றும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தில் ரஜினியின் கெட்டப் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளதால், முருகதாஸ் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு அவர்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் சனிக்கிழமையன்று ரகசியமாக போட்டோ ஷூட் நடத்தப்பட்டது.
இதில் ரஜினிகாந்துக்கு கமிஷனர் போல போலீஸ் உடை அணிவித்து புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மிகவும் பாதுகாப்பாக போட்டோ ஷூட் நடத்தப்பட்டாலும் அங்கிருந்த யாரோ ரஜினியின் போலீஸ் அதிகாரி தோற்றத்தை செல்போனில் படம் பிடித்து இணையதளத்தில் கசிய விட்டுள்ளார்.

(IMAGE COURTESY: TWITTER)
தற்போது இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரவி வருகிறது. படப்பிடிப்புக்கு முன்னரே ரஜினியின் தோற்றப் புகைப்படம் வெளியாகியுள்ளதால், இயக்குநர் முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்முறை அரேபிய படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மான்!
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!

போராட்டத்தை இணைந்து முன்னெடுப்போம்- மு.க. ஸ்டாலின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த ராகுல்!

என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன்! - ஹபீபி படத்தைப் பாராட்டிய தனுஷ்!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



