சுடச்சுட

  

  ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள தபாங் 3

  By எழில்  |   Published on : 21st August 2019 03:28 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  dabangg3

   

  தபாங் படத்தொடரின் 3-ம் பாகம் மூலமாக மீண்டும் இணைந்துள்ளார்கள் சல்மான் கானும் பிரபுதேவாவும். 2010-ல் வெளியான தபாங் படத்தை அனுராக் காஷ்யப்பும் தபாங் 2 படத்தை அர்பாஸ் கானும் இயக்கினார்கள். 53 வயது சல்மான் கான் நடிக்கும் தபாங் 3 படத்தைத் தற்போது இயக்கி வருகிறார் பிரபுதேவா. 

  10 வருடங்களுக்கு முன்பு, வாண்டட் என்கிற சூப்பர் ஹிட் படம் மூலமாக சல்மான் கானும் பிரபுதேவாவும் முதல்முதலாக இணைந்தார்கள். அது பிரபுதேவா இயக்கிய முதல் ஹிந்திப் படம். கடைசியாக 2015-ல் சிங் ஈஸ் பிளிங் என்கிற ஹிந்திப் படத்தை இயக்கினார் பிரபுதேவா. இதன்பிறகு விஜய் இயக்கிய தேவி படம் முதல், தமிழில் நடிகராகப் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நான்கு வருடத்துக்குப் பிறகு ஹிந்திப் படம் இயக்க மீண்டும் களமிறங்கியுள்ளார்.

  தபாங் 3 படம் ஹிந்தி உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 20 அன்று வெளியாகவுள்ள இந்தப் படம் - ஹிந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai