மூத்த ஒளிப்பதிவாளர் ராமச்சந்திர பாபு மறைவு

125-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணிபுரிந்த  ஒளிப்பதிவாளர் ராமச்சந்திர பாபு (72) மாரடைப்பால் சனிக்கிழமை கோழிகோட்டிலுள்ள மருத்துவமனையில் காலமானார்
மூத்த ஒளிப்பதிவாளர் ராமச்சந்திர பாபு மறைவு
Published on
Updated on
1 min read

125-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த ராமச்சந்திர பாபு (72) மாரடைப்பால் கோழிகோட்டிலுள்ள மருத்துவமனையில் சனிக்கிழமை காலமானார். 

மலையாள திரைப்படத் துறையின் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் ஒரு பகுதியாக இருந்த  ராமச்சந்திர பாபு,  கருப்பு - வெள்ளை நிறத்திலிருந்து வண்ணத்திற்கு திரையுலகம் மாறியபோது பெரும் பங்களிப்பு செய்துள்ளார்.

1977-ஆம் ஆண்டு ராமு காரியட் இயக்கிய  தனது முதல் வண்ணப்படமான ‘ட்வீப்பு’ தொடங்கி, ராமச்சந்திர பாபு தனது படைப்புகளுக்காக நான்கு முறை சிறந்த ஒளிப்பதிவுக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றுள்ளார். பரதன் இயக்கத்தில் 1978-ல் வெளியான ‘ரதிநிர்வேதம்’, 1980-ல் ‘சாமரம்’ மற்றும் 1989-ல் ஹரிஹரன் இயக்கி மம்முட்டி நடித்த ‘ஓரு வடக்கன் வீரகதா’ படங்களுக்காக மூன்று முறை விருதுகளைப் பெற்றார். 'படயோட்டம்' (1982), 'அக்ரஹாரத்தில் கழுதை' (1978),  'சலபம்' (1996 ), 'கஸல்' (1993), 'கன்மடா' (1998) உள்ளிட்ட பல படங்களில் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.மேலும், எம் டி வாசுதேவன் நாயர் இயக்கத்தில் 1973-ம் ஆண்டு வெளியான ‘நிர்மல்யம்’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக ராமச்சந்திர பாபு இருந்தார். இந்தப் படம் சிறந்த திரைப்படத்திற்கான இந்திய தேசிய விருதை வென்றது.

ராமச்சந்திர பாபுவின் மறைவுக்கு கேரள காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலா இரங்கல் தெரிவித்தார். மலையாளத் திரையுலகம் இதுவரை கண்டிராத சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் என்று புகழஞ்சலி செலுத்தினார். "மலையாளத் திரைத்துறையின் ஆகச் சிறந்த திரைப்படங்களை அவரது கேமரா படம்பிடித்துள்ளது," என்று கலாச்சார அமைச்சர் ஏ கே பாலன் தனது இரங்கலைத் தெரிவித்தார்.

கே ஜி ஜார்ஜ் இயக்கிய யவனிகா, பரதன் இயக்கிய மர்மாரம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் 1982 ஆம் ஆண்டில் கேரள மாநில சிறந்த திரைப்பட விருதை வென்றன. ராமச்சந்திர பாபு தமிழ், தெலுங்கு, இந்தி, அரபு மற்றும் ஆங்கில மொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரனின் சகோதரர் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com