பாகுபலி அழுத்தத்தை ‘சாஹோ’ மீது திணிக்காதீர்கள்! பதறும் இயக்குனர்

பிரபாஸ் நடித்து பிரமாண்ட வெற்றி கண்ட பாகுபலி 1 & 2 திரைப்படங்களுக்குப் பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளிவரவிருக்கும் முதல்திரைப்படம் இது என்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டிருக்கிறது. இதை பாஸி
பாகுபலி அழுத்தத்தை ‘சாஹோ’ மீது திணிக்காதீர்கள்! பதறும் இயக்குனர்

பிரபாஸ் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘சாஹோ’. ஆக்‌ஷன் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ரத்தா கபூர் நடித்திருக்கிறார். படத்தின் இரு டீஸர்கள் சமீபத்தில் வெளிவந்திருக்கின்றன. ஸ்ரத்த கபூர் தவிர படத்தில் ஜாக்கி செராஃப், நீல் நிதின் முகேஷ், அருண் விஜய் எனப் பலர் இணைந்திருக்கிறார்கள். படத்திற்கான ஆக்‌ஷன் காட்சிகளுக்காக மட்டுமே பலகோடி ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளதாகத் தகவல். இயக்குனர் எஸ் எஸ் ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து பிரமாண்ட வெற்றி கண்ட பாகுபலி 1 & 2 திரைப்படங்களுக்குப் பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளிவரவிருக்கும் முதல்திரைப்படம் இது என்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டிருக்கிறது. இதை பாஸிட்டிவ்வாக எடுத்துக் கொண்டு சந்தோசப்படுவதா அல்லது பாகுபலியுடன் ஒப்பிட்டு அதைப்போல இதில்லையே, இது வேறு விதமான திரைப்படமாயிற்றே என்று குழப்பத்தில் ஆழ்வதா என்ற சஞ்சலத்தில் படத்தின் இயக்குனர் சுஜீத் மருகிக் கொண்டிருக்கிறார்.

சாஹோ திரைப்படத்தின் சமீபத்திய டீஸர்...

இயக்குனருக்கு மட்டுமல்ல ஹீரோவுக்கும் அதே விதமான கவலைகள் இருக்கலாம். ஆனால், அவர் இதுவரையிலும் வெளிப்படுத்தி இருக்கவில்லை. ஆனால் இயக்குனர் சுஜீத் சமீபத்தில் வெளிப்படுத்தியிருக்கும் ஆதங்கம் என்னவென்றால்? படம் ஆகஸ்டில் வெளிவரவிருக்கும் நிலையில் ஊடகங்களும், திரை விமர்சகர்களும் பாகுபலி படத்தை, சாஹோவுடன் ஒப்பிடாமல் இதைத் தனித்து புரிந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இயக்குனர் ராஜமெளலி இரு லெஜண்ட். அவரைப் போல அத்தனை பிரமாண்டத்தில் எந்த ஒரு இயக்குனராலும் ஒரு படத்தை திட்டமிட இயலாது. இந்தியத் திரையுலகில் பாகுபலி ஒரு லைஃப் டைம் சாதனை. அதன் களமே வேறு. அதை சாஹோவில் எதிர்பார்ப்பது எப்படிப் பொருந்தும். சாஹோவுக்கான ஜானரில் அதை புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் படத்துக்காக நடிகர்களும் சரி, தொழில்நுட்பக் கலைஞர்களும் சரி மிகவும் மெனக்கெட்டிருக்கிறோம். என்னை விட ஹீரோ பிரபாஸூக்கு பட வெளியீடு குறித்த அழுத்தம் மிக அதிகமாக இருக்கிறது. சாஹோவை வெற்றிப்படமாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நாங்கள். எனவே படம் வெளிவருவதற்கு முன்பே அதைப் பற்றிய அனுமானங்களை வெளியிடுவதை பக்குவமற்ற தன்மையாகவும் பொருளற்ற விவாதமாகவும் காண்கிறேன் நான். படம் மிக நன்றாகவே வந்திருக்கிறது. பாகுபலிக்கு கிடைத்த வரவேற்பு இந்தப் படத்திற்கும் நிச்சயம் கிடைக்கும் என நம்புகிறேன் நான். படம் வெளிவந்தால் தெரிந்து விடப்போகிறது அதை மக்கள் எவ்வாறு ரிஸீவ் செய்கிறார்கள், அதற்கான வரவேற்பு என்ன என்று, அது வரையில் விமர்சகர்களும், ஊடகங்களும் சற்றுப் பொருக்கலாமே! என்ற ரீதியில் தன் ஆதங்கத்தைப் பதிவு செய்திருக்கிறார் சுஜீத்.

அது மட்டுமல்ல, இந்த திரைப்படத்தைப் பொருத்தவரை ஒரு இயக்குனராகத் தன்னால் மிகச்சுதந்திரமாக செயல்பட முடிந்தமைக்கான காரணம் பிரபாஸ் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையே என்பதையும் அவர் பதிவு செய்ய மறக்கவில்லை. அத்துடன் இத்திரைப்படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை மேலைநாட்டு ஸ்டண்ட் இயக்குனர்களை வைத்து நாங்கள் படமாக்கியிருக்கிறோம். அது இங்கொன்றும் புதுமை இல்லை. சாஹோ மட்டுமல்ல அதற்கும் முன்பு பல திரைப்படங்களில் மேலை நாட்டு தொழில்நுட்பக் கலைஞர்களைப் பயன்படுத்தி இருக்கிறோம் தானே என்று நீங்கள் கேள்வி எழுப்பலாம். அது வாஸ்தவமே, ஆனால், இதில் என்ன ஸ்பெஷல் என்றால்? முந்தைய திரைப்படங்களைப் போல சண்டைக்காட்சிகளை இயக்கும் பொறுப்பை மட்டும் அவர்களிடம் அளித்துவிட்டு அதை நம்மூர் ஸ்டைலில் எடிட் செய்து பப்படமாக்காமல் இந்தப்படத்தில் சண்டைக் காட்சிகளுக்கான எடிட்டிங்கிலும் அவர்களுக்குப் பூரண சுதந்திரம் அளித்திருக்கிறோம். படம் வெளிவந்த பின் அதன் சண்டைக்காட்சிகளில் இருக்கும் தரத்தைக் கண்ட பின் நீங்களே அதை உணர்வீர்கள் என்றும் சுஜீத் தெரிவித்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com