ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! மு.க. ஸ்டாலின் வாழ்த்து!இடைத்தேர்தலில் போட்டியில்லை! திருமாவளவன்நீங்கள் ஒரு பைத்தியம்; சிறையில் இருந்திருப்பீர்கள்! நெதன்யாகுவை எச்சரித்த டிரம்ப்! 22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

விசித்ரா... ரீ எண்ட்ரி!

ஆயிற்று 18 வருடங்கள். இடைப்பட்ட காலங்களில் விசித்ரா என்ன செய்து கொண்டிருந்தார் என்றால்? திருமணம் செய்தார்.

News image
Updated On :24 மே 2019, 3:31 pm IST

விசித்ராவை நினைவிருக்கிறதா?

இருக்கும். இல்லாமல் போக 0.00001 % கூட வாய்ப்பே இல்லை.

எத்தனை படங்கள்?

தலைவாசல் முதல் முத்து, பெரிய குடும்பம், எங்க முதலாளி, விஜய், அஜித்தின் ஆரம்ப காலத் திரைப்படங்கள் பல என எத்தனை திரைப்படங்களில் ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்தவர் அவர். பின்னே அத்தனை சீக்கிரம் மறந்து விடுவார்களா என்ன? ஆத்மா திரைப்படத்தில் கூட விளக்கு வைப்போம், விளக்கு வைப்போம் என்றொரு பாடலில் வருவார்.

திரைப்படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த போது விசித்ராவுக்கு பெண் ரசிகைகள் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அதே விசித்ரா சன் டிவி தொடர்களில் வேணு அர்விந்துக்கு ஜோடியாக இரு மெகா சீரியல்களில் நடித்தார். ஒன்றின் பெயர் ஞாபகமிருக்கிறது  அது  ‘வாழ்க்கை’ எனும் நெடுந்தொடர். அதில் விசித்ராவுடன் நடித்த மற்றொரு பிரபலம் இன்று குணச்சித்திர நடிப்பில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் எம் எஸ் பாஸ்கர். இவர்கள் இருவரின் நடிப்பையும் அந்த சீரியலில் மறக்கவே முடியாது. குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி வாழ்வைத் தொலைத்த முதல் மனைவியாக நடித்திருப்பார் விசித்ரா. மற்றொரு நெடுந்தொடரில் டூரிஸ்ட் கைடாக பாந்தமாக புடவை கட்டிக் கொண்டு நடித்திருப்பார். இரண்டுமே அப்போது விசித்ராவுக்கு ஏராளமான பெண் ரசிகைகளைத் தேடித்தந்த தொடர்கள் என்றால் அது பொய்யில்லை.

ஆயிற்று 18 வருடங்கள். இடைப்பட்ட காலங்களில் விசித்ரா என்ன செய்து கொண்டிருந்தார் என்றால்? திருமணம் செய்தார். காதல் கணவருடன், கணவரது பணி நிமித்தமாக கோவா, புனே எனச் சில வருடங்கள் வாழ்ந்து விட்டு கடைசியாக சில வருடங்களுக்கு முன்பு மைசூரில் சொந்தமாக ரெஸ்டாரெண்டு கட்டி நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தார். அவருக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் பள்ளி இறுதி வகுப்பு பயில்கிறார். அடுத்து இரட்டையர். இருவருக்கும் இப்போது 10 வயதாம். குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள். தானே தனியாக தங்களைக் கவனித்துக் கொள்ளும் பக்குவம் வந்து விட்டது அவர்களுக்கு. 

அந்த வேளையில் தான் மீண்டும் நடிக்க வாய்ப்புகள் கதவைத் தட்டியிருக்கிறது. நடுவில் இணைய ஊடகமொன்றில் பிக்பாஸ் கண்டெஸ்டண்ட் ஆகப்போகிறார் விசித்ரா என்று வதந்திகளும் கிளப்பி விடப்பட்டன.

பிக்பாஸ் சீஸன் 3 போட்டியாளராகிறாரோ இல்லையோ, கண்டிப்பாக ரீ எண்ட்ரி உண்டு என்கிறார் விசித்ரா.

வாங்க விசித்ரா வாங்க, சினிமாவோ, சீரியலோ எதுவானாலும் நல்ல ரோல்ஸ் பண்ணுங்க. தயவுசெய்து க்ளிஷேவான கொடுமைக்கார மாமியார், வில்லித்தனமான சின்னம்மா, அத்தை, நாத்தனார் ரோல்ஸ்ல மட்டும் மாட்டிக்கிடாதீங்க.


COURTESY: INDIA GLITZ.COM

Related Article

பி.எம். நரேந்திர மோடி பட வெளியீட்டுக்கு ஆதரவளிக்காத பாலிவுட்: விவேக் ஓப்ராய் வருத்தம்!

பிக்பாஸ் சீஸன் 3, LGBTQ போட்டியாளர் யாருப்பா?

‘லஷ்மி பாம்ப்’ (லஷ்மி வெடி) ஹிந்தி திரைப்படத்தில் இருந்து ராகவா லாரன்ஸ் விலகல்!

வெளியானது மகாமுனி டீஸர்! வாவ் சொல்ல வைத்த அட்டகாசமான விடியோ!

வயசானாலும் இவருக்கு மட்டும் பட வாய்ப்புகள் அதிகரிக்கிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.