ஊரடங்கால் ரத்தப் பற்றாக்குறை: ரத்த தானம் செய்த நடிகர் சிரஞ்சீவி
ஊரடங்கால் ரத்தப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பிரபல நடிகர் சிரஞ்சீவி ரத்த தானம் செய்துள்ளார்.


ஊரடங்கால் ரத்தப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பிரபல நடிகர் சிரஞ்சீவி ரத்த தானம் செய்துள்ளார்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 18,500 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, 21 நாள் தேசிய ஊரடங்கை பிரதமா் மோடி கடந்த மாதம் 24-ஆம் தேதி அறிவித்தாா். பேருந்து, ரயில், விமானப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்த நோய்த்தொற்று, ஒருவரிடம் இருந்து மற்றவா்களுக்கு எளிதில் பரவும் என்பதால், பொதுமக்கள் வெளியில் நடமாடுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அத்தியாவசியப் பொருள்கள் விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. பிறகு, தேசிய அளவிலான ஊரடங்கை மேலும் நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டார் பிரதமர் மோடி. கரோனா தொற்று பரவலின் தீவிரத்தினால், ஊரடங்கு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கினால் நோயாளிகளுக்கு ரத்தம் வழங்குவதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானதால் பிரபல நடிகர் சிரஞ்சீவி, சிரஞ்சீவி ரத்த வங்கியில் ரத்த தானம் செய்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள விடியோவில் கூறியதாவது:
ஊரடங்கினால் ரத்த வங்கிகளில் ரத்தப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது மருத்துவமனை வட்டாரங்களில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. புற்று நோயாளிகள், இதய நோயாளிகள், விபத்தில் சிக்கியவர்கள் போன்றோர் ரத்தம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள். இதனால் பொதுமக்கள் அனைவரும் அருகில் உள்ள ரத்த தான வங்கிக்குச் சென்று ரத்த தானம் செய்யும்படிக் கேட்டுக்கொள்கிறேன். இதற்காக வெளியே செல்லும்போது காவலர்கள் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள். என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...