ஹைதராபாத்: நடிகர் சிரஞ்சீவி தனது நெடுநாள் நண்பரான ரஜினிகாந்திற்கு ட்விட்டரில் விட்ட சவாலை ரஜினி ஏற்பாரா என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடையே நிலவுகிறது.
கரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்காரணமாக திரைப்பிரபலங்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். அவர்கள் தங்களது ஓய்வு நேரத்தை எவ்வாறு செலவிடுகின்றனர் என்பது தொடர்பான விடியோக்களை அவ்வபோது தங்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வரிசையில் தெலுங்கில் ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் இயக்குநரான சந்தீப் ரெட்டி வங்கா ட்விட்டரில் புதிய சவால் ஒன்றை தொடங்கி வைத்தார். அதன்படி திரையுலகப் பிரபலங்கள் வீட்டு வேலை செய்வதை வீடியோவாக எடுத்து #BetheREALMAN எனும் ஹேஷ்டேக்கில் பதிவிடுமாறு அவர் கூறியிருந்தார். அவர் விடுத்த சவாலை ஏற்று பிரபல இயக்குநரான ராஜமவுலி தான் வீட்டு வேலைகள் செய்யும் விடியோவை ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டிருந்தார்
அவர் அதே சவாலை நிறைவேற்றுமாறு நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு ராஜமவுலி சவாலி விடுத்திருந்தார். பின்னர் ஜூனியர் என்.டி.ஆரால் அந்த சவால் நடிகர் சிரஞ்சீவிக்கு விடப்பட்டது. அதை ஏற்ற சிரஞ்சீவி வீட்டை சுத்தம் செய்தது மட்டுமில்லாமல், தனது தாயாருக்கு தோசை சுட்டும் கொடுத்து விடியோ வெளிட்டார்.
தற்போது இதே சவாலை அவர் தனது நெடுநாள் நண்பரான ரஜினிகாந்திற்கு அளித்துள்ளார். சிரஞ்சீவியின் சவாலை ரஜினி ஏற்பாரா என்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருகின்றனர்.
Here it is Bheem @tarak9999 à°¨à±à°¨à± à°°à±à°à± à°à±à°¸à± పనà±à°²à±...à°à°µà±à°µà°¾à°³ à°®à±à°à±à°¸à° à° à°µà±à°¡à°¿à°¯à± సాà°à±à°·à±à°¯à°. And I now nominate @KTRTRS & my friend @rajinikanth #BeTheRealMan challenge. pic.twitter.com/y6DCQfWMMm
â Chiranjeevi Konidela (@KChiruTweets) April 23, 2020
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சர்வதேச கிரிக்கெட்டில் 18 ஆண்டுகள் நிறைவு; பலரும் அறிந்திராத விராட் கோலியின் 18 சாதனைகள்!

இங்கிலாந்திலிருந்து மீட்டு வரப்பட்ட பழமையான சிலையைப் பார்வையிட்ட முதல்வர்!

ரியோ நடிக்கும் ராம் இன் லீலா படத்தின் பெயர் மாற்றம்!

ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்... லக்ஷயா சென் வெற்றிக்கு தில்லி ரசிகர்கள் கோஷம்!
விடியோக்கள்



