இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சமையல் வேலையிலிருந்து விடுவித்து நடிகை மாளவிகாவைக் குஷிப்படுத்திய ரசிகர்!

மற்றொரு ரசிகர் அந்தப் படத்தை மாற்றி வரைந்து மாளவிகாவிடம் பாராட்டு பெற்றுள்ளார்...

News image
Updated On :28 ஏப்ரல் 2020, 4:52 am

DIN

மாஸ்டர் படக்குழு தொடர்பாக ரசிகர் வரைந்த படமொன்றில் தனக்கு வழங்கப்பட்டிருந்த சமையல் வேலைக்கு எதிர்ப்பு தெரிவித்தார் நடிகை மாளவிகா. இந்நிலையில் ரசிகர் ஒருவர் வரைந்த மற்றொரு படத்தில் சமையல் வேலையிலிருந்து மாளவிகாவை விடுவித்து அவரைக் குஷிப்படுத்தியுள்ளார்.

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார் விஜய். மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசை - அனிருத். மாஸ்டர் படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா போன்றோர் நடித்துள்ளார்கள்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரைப்படப் படப்பிடிப்புகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. திரையரங்குகளும் இயங்கவில்லை. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கரோனாவால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மாஸ்டர் படக்குழு ஒரே வீட்டில் இருந்தால் தற்போது என்ன செய்யும் என்றொரு கற்பனையைப் படமாக வரைந்திருந்தார் விஜய் ரசிகர் ஒருவர். அதை ட்விட்டரில் அவர் பகிர்ந்திருந்தார். விஜய் உள்ளிட்ட படக்குழுவைச் சேர்ந்த ஆண்கள் ஏதாவது வேலையைச் செய்துகொண்டோ ஓய்வு எடுத்துக்கொண்டோ இருந்தபோது கதாநாயகி மாளவிகா சமையல் செய்துகொண்டிருப்பது போல படத்தில் வரையப்பட்டிருந்தது. இதைப் பார்த்த மாளவிகா, கற்பனைப் படத்தில் கூட கதாநாயகிக்குச் சமையல் வேலை தானா, இவை எப்போது மாறும் எனக் கேள்வி எழுப்பி ட்வீட் செய்திருந்தார்.

Story image

எனினும் இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்ததால் தன்னுடைய ட்வீட்டை நீக்கினார் மாளவிகா மோகனன்.

இந்நிலையில் மற்றொரு ரசிகர் அந்தப் படத்தை மாற்றி வரைந்து மாளவிகாவிடம் பாராட்டு பெற்றுள்ளார். அவர் வரைந்த புதிய படத்தில் மாளவிகாவை சமையல் வேலையிலிருந்து விடுவித்து அவர் புத்தகம் படிப்பது போல வரைந்துள்ளார். இதைப் பார்த்த மாளவிகா அந்தப் படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும் தனக்குப் புத்தகங்கள் படிக்கப் பிடிக்கும் என உங்களுக்கு எப்படித் தெரியும் என்றும் ரசிகரைப் பாராட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.