எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

அருவா படத்தில் சூர்யாவுக்குப் பதிலாக அருண் விஜய்?

சூர்யாவுக்குப் பதிலாக ஹரி இயக்கவுள்ள அருவா படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக...

News image
Updated On :10 ஆகஸ்ட் 2020, 10:45 am

DIN

சூர்யாவுக்குப் பதிலாக ஹரி இயக்கவுள்ள அருவா படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று விரைவில் வெளியாகவுள்ளது. அடுத்ததாக வெற்றிமாறனுடன் இணைந்து வாடிவாசல் என்கிற படத்தில் நடிக்கிறார் சூர்யா. திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட பிறகு வாடிவாசல் படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.

ஹரி இயக்கத்தில் அருவா என்கிற படத்திலும் சூர்யா நடிக்க இருந்தார். சூர்யாவின் 39-வது படமாகவும் ஹரி இயக்கவுள்ள 16-வது படமாகவும் இருந்த அருவா படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இருந்தது. இசை - இமான். சங்கத் தமிழன் படத்தில் நடித்த ராஷி கண்ணா, அருவா படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். 

வேல், ஆறு மற்றும் சிங்கம் படத்தின் மூன்று பாகங்களை அடுத்து, சூர்யா - ஹரி கூட்டணியின் 6-வது படம் என்பதால் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கி தீபாவளியில் படம் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் படப்பிடிப்பு தொடங்கத் தாமதமானது. கரோனாவால் திரையுலகம் மிகவும் பாதிப்படைந்துள்ளதால் அருவா படத்தில் தன்னுடைய சம்பளத்தில் 25% குறைத்துக்கொள்ள ஹரி முடிவு செய்து அறிக்கை வெளியிட்டார். 

இந்நிலையில் அருவா படத்திலிருந்து சூர்யா விலகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து சூர்யாவுக்குப் பதிலாக ஹரியின் உறவினரான அருண் விஜய் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகத் தெரிகிறது.

அருவா படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.