30 பேர் மட்டுமே கலந்துகொண்ட பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதியின் திருமணம் (படங்கள்)
நடிகர்கள் வெங்கடேஷ், ராம் சரண், அல்லு அர்ஜூன், நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா போன்றோரும்


தெலுங்கு நடிகர் ராணா டகுபதி, மிஹீகாவைக் காதல் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
ராணா டகுபதி. 2010-ல் லீடர் என்கிற தெலுங்குப் படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார். பாகுபலி படம் தான் இவரை புகழின் உச்சத்துக்குக் கொண்டு நிறுத்தியது. ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.
தன்னுடைய காதலியைச் சமீபத்தில் உலகுக்கு அறிமுகப்படுத்தினார் ராணா டகுபதி. மிஹீகா பஜாஜின் புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் வெளியிட்டு எனக்குச் சம்மதம் சொன்னார் என ராணா குறிப்பிட்டார். ஹைதராபாத்தைச் சேர்ந்த மிஹீகா, டியூ டிராப் டிசைன் ஸ்டூடியோவின் நிறுவனர். மே 21 அன்று இரு குடும்பத்தினரும் சந்தித்து திருமணம் பற்றி விவாதித்தார்கள்.
ஆகஸ்ட் 8 அன்று ஹைதராபாத்தில் ராணா டகுபதி - மிஹீகா திருமணம் நடைபெற்றது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இத்திருமணத்தில் 30 பேர் மட்டுமே கலந்துகொண்டார்கள். நடிகர்கள் வெங்கடேஷ், ராம் சரண், அல்லு அர்ஜூன், நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா போன்றோரும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள். திருமணத்தில் பங்கேற்ற அனைவரும் கரோனா பரிசோதனை நடைபெற்றது.
ராணா டகுபதியின் திருமணத்துக்குப் பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.



தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...