அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தார் தி மாஸ்க் ஆஃப் ஸோரோ கதாநாயகன்

தி மாஸ்க் ஆஃப் ஸோரோ படத்தில் கதாநாயகனாக நடித்து புகழ்பெற்ற ஆன்டோனியோ பாண்டரஸ்...

News image
Updated On :27 ஆகஸ்ட் 2020, 7:05 am

DIN

தி மாஸ்க் ஆஃப் ஸோரோ படத்தில் கதாநாயகனாக நடித்து புகழ்பெற்ற ஆன்டோனியோ பாண்டரஸ் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதிலிருந்து குணமாகிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இம்மாதத் தொடக்கத்தில் தனது 60-வது பிறந்த நாளன்று ட்விட்டரில் ஆன்டோனியோ பாண்டரஸ் கூறியதாவது:

கரோனா வைரஸ் தொற்று எனக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் என்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறேன். இதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் நலமாகவே உள்ளேன். சிறிது சோர்வாக உள்ளது. ஆனால் விரைவில் குணமடைவேன் என்கிற நம்பிக்கை உள்ளது. இந்தக் காலத்தைப் படிக்கவும் ஓய்வு எடுக்கவும் பயன்படுத்திக் கொள்வேன். என் 60 வருட வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கும் வகையில் திட்டமிட்டுக் கொள்வேன் என்று கூறினார். 

பெயின் அண்ட் குளோரி படத்துக்காகக் கடந்த வருடம் கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை ஆன்டோனியோ வென்றார். டெஸ்பரடோ (1995), மாஸ்க் ஆஃப் ஸோரோ (1998), ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெக்ஸிகோ (2003) போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து தான் குணமாகிவிட்டதாக ஆன்டோனியோ தெரிவித்துள்ளார். நான் குணமாகிவிட்டேன். என்னைப் போல அதிர்ஷ்டம் கிடைக்காதவர்களுக்காக வருத்தப்படுகிறேன். அதேபோல என்னை விடவும் அதிகமாகச் சிரமப்பட்டவர்களுக்காகவும். கரோனாவை எதிர்கொண்டிருப்பவர்களுக்குக் கூடுதல் மனவலிமை கிடைக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.