ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தமிழக அரசு நினைத்திருந்தால் படப்பிடிப்புக்குச் செல்வதை முடக்கியிருக்கலாம்: பாரதிராஜா அறிக்கை

படப்பிடிப்புத் தளம் சென்றாலும் நாங்கள் உண்மையாகவே மீளும் நாள் திரையரங்கங்கள் திறக்கும் நாள் தான்..

News image
Updated On :31 ஆகஸ்ட் 2020, 12:03 pm

செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் பல்வேறு தளா்வுகளை அளித்து தமிழக முதல்வா் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு, ஒரே நேரத்தில் 75 பேருக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. படப்பிடிப்பின் போது, பாா்வையாளா்களுக்கு அனுமதி கிடையாது என்று அறிவித்துள்ளார். 

இந்நிலையில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து இயக்குநர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

இப்போதும் கரோனாவின் பரவல் சூழலில் தமிழக அரசு நினைத்திருந்தால் நாங்கள் படப்பிடிப்புக்குச் செல்வதை முடக்கியே வைத்திருக்கலாம். ஆனால் அரசு கொடுத்த வழிமுறைகளைப் பின்பற்றி முழுமையாகச் செயல்படுவோம் என்ற எங்களின் உறுதிமொழியையும் பட்டினியால் வாடுவோர்களையும் கருத்தில் கொண்டு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்ததை நன்றியோடு பார்க்கிறோம். முதல்வருக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கும் நன்றிகள் பல. 

இன்னும் சில வரைமுறைகளோடு எங்கள் திரையரங்குகளையும் இயங்க ஆவன செய்வீர்கள் எனக் காத்திருக்கிறோம். பிற்சேர்க்கைப் பணி செய்தாலும் படப்பிடிப்புத் தளம் சென்றாலும் நாங்கள் உண்மையாகவே மீளும் நாள் திரையரங்கங்கள் திறக்கும் நாள் தான் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.