ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கர்ணன் படப்பிடிப்பு நிறைவு: தனுஷ் நெகிழ்ச்சி

கர்ணன் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இந்தப் படத்தை அளித்த மாரி செல்வராஜுக்கும்...

News image
Updated On :10 டிசம்பர் 2020, 11:34 am

DIN

பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிக் கவனம் பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் தனுஷ்.

கர்ணன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தாணு தயாரித்துள்ளார். இந்தப் படமும் தனது முதல் படம் போல முக்கியமான பிரச்னையைப் பேசும் என்கிறார் மாரி செல்வராஜ். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்துக்குப் பிறகு கர்ணன் படம் வெளிவரவுள்ளது. இசை - சந்தோஷ் நாராயணன்.

இந்தப் படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். மலையாள நடிகை ரஜிஷா விஜயன், 96 புகழ் கெளரி, லக்‌ஷ்மி குறும்படப் புகழ் லட்சுமி ப்ரியா சந்திரமெளலி ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். ஜுன், ஃபைனல்ஸ், ஸ்டாண்ட் அப் படங்களில் நடித்த ரஜிஷா நடிக்கும் முதல் தமிழ்ப் படம் இது.

இந்நிலையில் கர்ணன் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக நடிகர் தனுஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

கர்ணன் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இந்தப் படத்தை அளித்த மாரி செல்வராஜுக்கும் ஆதரவு அளித்த வி கிரியேஷன்ஸ் தாணு சாருக்கும் படக்குழுவினருக்கும் நன்றி. இந்தச் சிறப்பான படத்துக்கு அற்புதமான இசையை அளித்த சந்தோஷ் நாராயணனுக்குச் சிறப்பு நன்றி என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.