அபூர்வ ராகங்கள் முதல் அண்ணாத்த வரை: ரஜினி நடித்துள்ள படங்களின் முழுப் பட்டியல்!
அபூர்வ ராகங்கள் முதல் கடைசியாக வெளிவந்த தர்பார் வரையிலான ரஜினி நடித்த படங்களின் பட்டியலை...


1950-ல் பிறந்த ரஜினி, 1975-ல் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
45 வருடத் திரையுலக வாழ்வில் ரஜினி இதுவரை 167 படங்களில் நடித்துள்ளார். சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த, அவருடைய 168-வது படம்.
தா்பாா் படத்தையடுத்து சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கினார் சிவா. தற்போது ரஜினி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். அண்ணாத்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், சதீஷ் உள்ளிட்ட பலா் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறாா்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு இசை- இமான்.
அபூர்வ ராகங்கள் முதல் கடைசியாக வெளிவந்த தர்பார் வரையிலான ரஜினி நடித்த படங்களின் பட்டியலை ரஜினி தரப்பில் கடந்த வருடம் வெளியிடப்பட்டது. இதில் ரஜினி நடித்த மொத்த படங்களின் பட்டியலும் உள்ளன.
ரஜினி நடித்துள்ள படங்களின் முழுப்பட்டியல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...