‘அண்ணாத்த' படப்பிடிப்பு டிசம்பர் 15-ல் தொடங்குகிறது: ரஜினி பிறந்த நாளன்று இயக்குநர் சிவா அறிவிப்பு
ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 15 முதல் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 15 முதல் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
45 வருடத் திரையுலக வாழ்வில் ரஜினி இதுவரை 167 படங்களில் நடித்துள்ளார். சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த, அவருடைய 168-வது படம்.
தா்பாா் படத்தையடுத்து சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கினார் சிவா. தற்போது ரஜினி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். அண்ணாத்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், சதீஷ் உள்ளிட்ட பலா் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறாா்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு இசை- இமான்.
இந்நிலையில் ரஜினியின் பிறந்த நாளன்று அவருக்கு வாழ்த்துகளைக் கூறியுள்ள இயக்குநர் சிவா, அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
ரசிகர்களின் வாழ்த்துகளுடன் இறைவனின் நல்லாசியுடன் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கும். மிகப் பெரிய படமாக அண்ணாத்த படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. அதன் படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 15 அன்று மீண்டும் தொடங்குவதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...