தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினி: புகைப்படத்தை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

ஹைதராபாத் சென்றுள்ள ரஜினி, அண்ணாத்த படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இதன் புகைப்படத்தை

News image
Updated On :14 டிசம்பர் 2020, 6:05 am

DIN

45 வருடத் திரையுலக வாழ்வில் ரஜினி இதுவரை 167 படங்களில் நடித்துள்ளார். சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த, அவருடைய 168-வது படம்.

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கினார் சிவா. தற்போது ரஜினி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். 

அண்ணாத்த படத்தில் நயன்தாரா, பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, கீா்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலா் ரஜினியுடன் நடித்து வருகின்றனா். ஒளிப்பதிவு - வெற்றி, இசை - இமான். கரோனா காரணமாக அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

இதற்காக நடிகா் ரஜினிகாந்த், தனி விமானத்தின் மூலம் சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு நேற்று புறப்பட்டுச் சென்றாா். விமானத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது பிறந்த நாளைக் கொண்டாட, விமானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படக்குழுவினருடன் கேக் வெட்டி நடிகா் ரஜினிகாந்த் பிறந்த நாளைக் கொண்டாடினாா். 

இந்நிலையில் ஹைதராபாத் சென்றுள்ள ரஜினி, அண்ணாத்த படப்பிடிப்பில் இணைந்துள்ளார். மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷுடன் ரஜினி இருக்கும் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.