அதிகாரபூர்வ அறிவிப்பு: ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் ஜெயம் ரவி நடித்த பூமி!
ஜெயம் ரவி நடித்துள்ள பூமி படம், பொங்கல் அன்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜெயம் ரவி நடித்துள்ள பூமி படம், பொங்கல் அன்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோமாளி பட வெற்றிக்குப் பிறகு லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் - பூமி. ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை லக்ஷ்மண் இயக்கியுள்ளார்.
பூமி படத்துக்கு இசை - இமான். ஜெயம் ரவியின் ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்.
பூமி, ஜெயம் ரவியின் 25-வது படம். டிக் டிக் டிக், அடங்க மறு, கோமாளி என ஹாட்ரிக் வெற்றிகளை ஜெயம் ரவி அடைந்துள்ளதால் அடுத்து வரும் அவருடைய படங்கள் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பூமி படம் மே 1 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருந்த நிலையில் கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக அதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் சூரரைப் போற்று, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களின் வரிசையில் பூமியும் இணைந்துள்ளது. பொங்கல் தினத்தன்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பூமி படம் நேரடியாக வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு குறித்து ரசிகர்களுக்கு எழுதிய கடிதத்தில் ஜெயம் ரவி எழுதியதாவது:
உங்களுடன் இணைந்து திரையரங்கில் இப்படத்தை ரசிக்க நினைத்தேன். ஆனால் காலம் வேறொரு திட்டம் வைத்திருக்கிறது. இப்படம் உங்கள் இல்லம் தேடி உங்கள் வரவேற்பறைக்கே வரவுள்ளது. இந்தப் பொங்கல் தினத்தில் எனது அழகான திரைப்படத்துடன் உங்கள் வீட்டில் உங்களைச் சந்திப்பதை ஆசிர்வாதமாகக் கருதுகிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...