2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

மார்ச் 23-ல் ரஜினி நிகழ்ச்சி: முன்னோட்ட விடியோ வெளியிட்டது டிஸ்கவரி சேனல்! (விடியோ)

ரஜினிகாந்த் பங்கேற்ற 'இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்' நிகழ்ச்சி மார்ச் 23-ல் இரவு 8 மணி ஒளிபரப்பாகும் என அறிவித்துள்ள டிஸ்கவரி சேனல், முன்னோட்ட விடியோவையும் வெளியிட்டுள்ளது.

News image
Updated On :27 பிப்ரவரி 2020, 5:53 am

DIN


நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற 'இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்' நிகழ்ச்சி மார்ச் 23 ஆம் தேதி இரவு 8 மணி ஒளிபரப்பாகவுள்ளது என டிஸ்கவரி சேனல் அறிவித்துள்ளது. இதற்கான முன்னோட்ட விடியோவையும் வெளியிட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு, கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள பண்டிப்பூர் புலிகள் காப்பகத்தில் நடைபெற்றது. இந்தப் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பியர் கிரில்ஸுடன் இணைந்து பணியாற்றினார்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ரஜினி பங்கேற்ற நிகழ்ச்சியின் தொகுப்பு வரும் மார்ச் 23-ஆம் தேதி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் என  அதிகாரப்பூர்வமாக டிஸ்கவரி சேனல் அறிவித்துள்ளது. இதற்கான முன்னோட்ட விடியோவையும் டிஸ்கவரி சேனல் தன்னுடைய ட்விட்டர் பதிவில் பகிர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.