/

பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டது பற்றி மனம் திறந்த நடிகை ஸ்ருதி ஹாசன்!

நான் அதை ஊக்குவிக்கிறேனா? இல்லை. அதற்கு எதிராக உள்ளேனா? இல்லை... 

News image
Updated On :28 பிப்ரவரி 2020, 7:39 am

கூடுதல் அழகுக்காக உடல் அமைப்பைத் தனக்குப் பிடித்தது போல மாற்றிக்கொள்ளும் பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து மனம் திறந்து வெளிப்படுத்தியுள்ளார் நடிகை ஸ்ருதி ஹாசன். 

இன்ஸ்டகிராமில் அவர் கூறியுள்ளதாவது:

அடுத்தவர்களின் கருத்துகளின்படி நான் நடக்கமாட்டேன். ஆனால் அவர் மிகவும் குண்டாகிவிட்டார், மிகவும் ஒல்லியாகிவிட்டார் எனச் சொல்வதைத் தவிர்க்கலாம். இந்த இரு புகைப்படங்களும் மூன்று நாள்கள் இடைவெளியில் எடுக்கப்பட்டவை. நான் என்ன சொல்லப் போகிறேன் என்பதைத் தன்னுடன் தொடர்புபடுத்திக்கொள்ளும் பெண்களும் இருப்பார்கள் என எண்ணுகிறேன். ஹார்மோன்களின் கருணையால் தான் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் வாழ்ந்து வருகிறேன். கடந்த வருடங்களாக அதனைச் சரி செய்ய முயன்று வருகிறேன். அது அவ்வளவு சுலபமல்ல. வலியும் உடல் மாற்றங்களும் அவ்வளவு எளிதல்ல. என் நிலையைப் பகிர்வது தான் எளிதாக உள்ளது. 

யாருக்கும் அடுத்தவர்களை மதிப்பிட உரிமையில்லை. இதுதான் என் வாழ்க்கை, இதுதான் என் முகம் எனக் கூறுவதில் பெருமைப்படுகிறேன். நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதை மறைக்க விரும்பவில்லை. நான் அதை ஊக்குவிக்கிறேனா? இல்லை. அதற்கு எதிராக உள்ளேனா? இல்லை. நான் எப்படி வாழவேண்டும் என முடிவெடுத்தேன். அவ்வளவுதான். நம் உடலின் மாற்றங்களையும் மனநிலையையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை நாம் அடையவேண்டும் என்று கூறியுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.