நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அர்ஜுன் கபூரை முத்தமிடும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மலைகா அரோரா!

அர்ஜுன் கபூரை முத்தமிடும் புகைப்படத்தைச் சமூகவலைத்தளத்தில் மலைகா வெளியிட்டுள்ளார்.

News image
Updated On :3 ஜனவரி 2020, 9:40 am

IANS

பிரபல தயாரிப்பாளரும் மறைந்த ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர் (போனி கபூரின் முதல் மனைவியின் மகன்). 34 வயதான இவர், 2 ஸ்டேட்ஸ், கி & கா படங்களில் நடித்துக் கவனம் பெற்றவர். 

மணி ரத்னம் இயக்கிய உயிரே படத்தில் தைய்யா தைய்யா பாடலுக்கு ஷாருக் கானுடன் இணைந்து நடனமாடியவர், மலைகா அரோரா. 46 வயதான இவர், பல படங்களில் நடித்துள்ளார். சில படங்களைத் தயாரித்துள்ளார். 1998-ல் நடிகரும் இயக்குநருமான அர்பாஸ் கானைத் திருமணம் செய்தார். 2017-ல் இருவரும் பிரிந்தார்கள். இவர்களுக்கு ஒரு மகன் உண்டு. அவர் மலைகாவிடம் வாழ்ந்து வருகிறார். 

அர்ஜுன் - மலைகா ஆகிய இருவரும் தற்போது காதலர்களாக உள்ளார்கள். மலைகாவுடனான காதலைக் கடந்த மே மாதம் ஒரு பேட்டியில் உறுதி செய்தார் அர்ஜுன் கபூர். 

இந்நிலையில் அர்ஜுன் கபூரை முத்தமிடும் புகைப்படத்தைச் சமூகவலைத்தளத்தில் மலைகா வெளியிட்டுள்ளார். இதற்குப் பல்வேறுவிதமான எதிர்வினைகளை ரசிகர்கள் அளித்துள்ளார்கள். 

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.