தன்னை ஒருதலையாகக் காதலித்தவனின் காதலை ஏற்க மறுத்ததால் 15-வது வயதில் அமிலம் வீச்சுக்கு ஆளான லட்சுமி அகர்வால், தன்னம்பிக்கையுடன் போராடி அவனுக்குச் சட்டத்தின் மூலம் தண்டனை வாங்கித் தந்தார். இதற்காக முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பாராட்டுதலைப் பெற்ற லட்சுமி அகர்வால், சில ஆண்டுகள் கழித்து அலோக் தீட்சித் என்பவரைக் காதலித்து ஒரு பெண் குழந்தைக்கு தாய் ஆனார். தன்னைப் போன்று அமிலம் வீச்சினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக சண்டிகரில் சமூக அமைப்பு ஒன்றை லட்சுமி அகர்வால் துவங்கியுள்ளார்.
இவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து பிரபல இயக்குநர் மற்றும் கவிஞருமான குல்சாரின் மகள் மேக்னா குல்சார் திரைப்படமொன்றை இயக்கியுள்ளார். லட்சுமி அகர்வால் வேடத்தில் பிரபல நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ளார். சபாக் (Chhapaak) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் நேற்று (ஜனவரி 10) வெளியானது. ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ், மிரிகா புரொடக்ஷன்ஸ், தீபிகா படுகோனின் கா புரொடக்ஷன் ஆகிய நிறுவனங்கள் கூட்டாகத் தயாரித்துள்ளன.
முதல் நாளன்று, நகரங்களில் மட்டும் அதிகப் பார்வையாளர்களைப் பெற்ற இந்தப் படம் முதல் நாள் வசூலாக இந்தியாவில் ரூ. 4.77 கோடியைப் பெற்றுள்ளது. இதனால் சனி, ஞாயிறு ஆகிய அடுத்த இரு தினங்களில் இப்படத்தின் வசூல் அதிகரித்தால் மட்டுமே இதன் வெற்றி நிர்ணயிக்கப்படும் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளம்: மதுபோதையில் பாம்பை பாக்கெட்டில் வைத்து டீ கடைக்குச் சென்ற இளைஞர்!
ராஷ்டிரிய சரண்டர் சங்கம் ஆர்எஸ்எஸ்: ராகுல் விமர்சனம்

தேர்தல் அலுவலர்களுக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்ததாக புகார்!

கூடுதல் நேரத்தில் கோல் அடித்த ரியல் பெட்டிஸ்..! முதலிடத்துக்கான வாய்ப்பை இழக்கும் ரியல் மாட்ரிட்!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


