காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பிரபல பாலிவுட் நடிகையின் கார் ஓட்டுநருக்கு கரோனா

என் குடும்பத்தினருக்கும் இதர பணியாளர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில்...

News image
Updated On :14 ஜூலை 2020, 5:29 am

DIN

பிரபல பாலிவுட் நடிகை சாரா அலி கானின் கார் ஓட்டுநருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி இன்ஸ்டகிராமில் சாரா அலி கான் கூறியதாவது:

என்னுடைய ஓட்டுநர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி உடனடியாக மும்பை மாநகராட்சிக்குத் தெரியப்படுத்தப்பட்டது. அவர் தனிமைப்படுத்துதல் மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து என் குடும்பத்தினருக்கும் இதர பணியாளர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இச்சமயத்தில் ஆதரவாக இருந்த மும்பை மாநகராட்சிக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகரான சயிப் அலி கானின் மகளான சாரா அலி கான் இதுவரை மூன்று படங்களில் நடித்துள்ளார். ஆனந்த் எல். ராயின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 2-வது ஹிந்திப் படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.