
கரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பிறந்த நாள் வாழ்த்துகளைக் கூற யாரும் தன்னைச் சந்திக்க வர வேண்டாம் என இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.
இயக்குநர் பாரதிராஜா தனது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதற்காகச் சமூகவலைத்தளங்களில் அவருக்குப் பலரும் வாழ்த்துகளைக் கூறியுள்ளார்கள்.
இந்நிலையில் ட்விட்டரில் பாரதிராஜா கூறியதாவது:
என் இனிய தமிழ் மக்களே, என் கலைத்துறை நண்பர்களே, என் சொந்தங்களே பந்தங்களே, முதன் முதலாக கரோனா எதிரொலி சமூக விழிப்புணர்வு காரணமாக இதயம் தொடுத்த உங்கள் வாழ்த்துக்களை எங்கிருந்தாலும் இதயம் கனிந்து பெற்றுக்கொள்கிறேன்.
யாரும் எம்மை சந்திக்க வர வேண்டாம் என சமூக பொறுப்பு உணர்ந்து தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.