நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அதிகாரிகளின் உத்தரவின்பேரில் காவலர்களும் வெடிகுண்டு கண்டறியும் பிரிவினரும் நடிகர் அஜித்தின் வீட்டில் சோதனை நடத்தினார்கள்.


சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்தின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற சோதனையில் அங்கிருந்து எந்த வெடிப்பொருளும் கண்டெடுக்கப்படவில்லை.
சென்னை எழும்பூரில் உள்ள மாநில கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா், நடிகா் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளாா். இதைக் கேட்டு அதிா்ச்சி அடைந்த கட்டுப்பாட்டு அறை காவலர்கள், நீலாங்கரை காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார்கள்.
அதிகாரிகளின் உத்தரவின்பேரில் காவலர்களும் வெடிகுண்டு கண்டறியும் பிரிவினரும் நடிகர் அஜித்தின் வீட்டில் சோதனை நடத்தினார்கள். பல மணி நேரம் நடைபெற்ற இச்சோதனையில் அங்கிருந்து எந்த வெடிப்பொருளும் கண்டெடுக்கப்படவில்லை.
இதையடுத்து வதந்தியைப் பரப்பும் நோக்கில் அந்த அழைப்பு வந்திருப்பது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து சென்னை போலீஸாா், சைபா் குற்றப்பிரிவுடன் இணைந்து அந்த அழைப்பு குறித்து விசாரணை செய்தனா்.
விழுப்புரத்தைச் சேர்ந்த ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. விழுப்புரம் காவல் நிலையத்துக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போனில் மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...