கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஹிந்தியிலும் வெளியாகவுள்ள அஜித்தின் வலிமை!

வலிமை படம் நேரடியாகத் திரையரங்குகளில் தான் வெளியாகும் என போனி கபூர் அறிவித்துள்ளார்.

News image
Updated On :29 ஜூலை 2020, 12:05 pm

DIN

நேர் கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு அஜித் - இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணி மீண்டும் தொடர்கிறது. இருவரும் இணையும் இப்படத்துக்கு வலிமை எனப் பெயரிடப்பட்டுள்ளது. போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு - நிரவ் ஷா.

ஊழியர்களின் பாதுகாப்பு கருதி வலிமை படம் தொடர்பான பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டாம் எனத் தயாரிப்பாளர் போனி கபூருக்கு அஜித் அறிவுறுத்தியுள்ளார். கரோனா வைரஸின் பாதிப்பு குறைந்த பிறகு போஸ்ட் புரொடக்‌ஷன் உள்ளிட்ட வலிமை படம் தொடர்பான பணிகளை மேற்கொள்ளலாம். தற்போது வலிமை படத்தில் பணியாற்றும் ஊழியர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் பாதுகாப்பே நமக்கு முக்கியம் என போனி கபூர், இயக்குநர் வினோத் ஆகியோரிடம் அஜித் கூறியதாகவும் அதற்கு இருவரும் சம்மதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் வலிமை படத்தின் வெளியீடு தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வலிமை படம் நேரடியாகத் திரையரங்குகளில் தான் வெளியாகும் என போனி கபூர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் வலிமை படம் ஹிந்தியிலும் வெளியாகவுள்ளதாகச் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே தேவதாஸ் ஹிந்திப் படத்தில் நடித்துள்ள அஜித், இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டில் அதிக ரசிகர்களைச் சென்றடையவுள்ளார். திறமையான கலைஞர்களைக் கொண்டு டப்பிங் பணிகள் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. ஆக்‌ஷன் காட்சிகளைக் கொண்ட படம் என்பதால் ஹிந்தியிலும் வலிமை படம் அதிக வரவேற்பைப் பெறும் எனத் தயாரிப்பாளர் தரப்பு எதிர்பார்ப்பில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.