ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

உங்களால் கர்வம் கொள்கிறேன்: தனுஷ் பெருமிதம்

என் ரசிகர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. உங்கள் அன்பால் திக்குமுக்காடிப் போய்விட்டேன்.

News image
Updated On :30 ஜூலை 2020, 7:15 am

DIN

தன்னுடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் தனுஷ் அறிக்கை வெளியிட்டார்.

இரு நாள்களுக்கு தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடினார் தனுஷ். அந்த நாளில் அவர் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தின் பாடலும் கர்ணன் படத்தின் மேக்கிங் விடியோவும் வெளியிடப்பட்டன. திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் சமூகவலைத்தளங்களில் தனுஷுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். இதையடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் தனுஷ். அதில் அவர் கூறியதாவது:

என் ரசிகர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. உங்கள் அன்பால் திக்குமுக்காடிப் போய்விட்டேன். அனைத்து காமன் டிபிக்கள், மேஷ்அப்கள், விடியோக்கள், மூன்று மாதங்களாக நீங்கள் செய்து வந்த கவுண்ட்டவுன் டிசைன்கள் அனைத்தையுமே என்னால் முடிந்தவரை பார்த்தேன், ரசித்தேன், மகிழ்ந்தேன். மிக்க மிக்க நன்றி. அதையும் தாண்டி நீங்கள் செய்த அத்தனை நற்பணிகளையும் கண்டு நெகிழ்ந்த நான், உங்களால் கர்வம் கொள்கிறேன், பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.