நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

லாபம் படத்தின் டப்பிங் பணிகளைத் தொடங்கினார் விஜய் சேதுபதி

லாபம் படத்தின் படப்பிடிப்பு ராஜபாளையத்தில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தொடங்கியது.

News image
Updated On :30 ஜூலை 2020, 11:55 am

DIN

2015-ல் புறம்போக்கு என்கிற பொதுவுடைமை படத்தை இயக்கிய எஸ்.பி. ஜனநாதன் அடுத்ததாக விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் லாபம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். 

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷ்ருதி ஹாசன் நடித்துள்ளார். 2017-ல் சிங்கம் 3 படத்தில் நடித்த ஷ்ருதி, 2 வருடங்கள் கழித்து நடித்துள்ள தமிழ்ப் படம் இது. இப்படத்துக்கு இசை - இமான். 

லாபம் படத்தின் படப்பிடிப்பு ராஜபாளையத்தில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தொடங்கியது.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக தடைபட்டிருந்த லாபம் படத்தின் டப்பிங் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. விஜய் சேதுபதி டப்பிங் செய்ததற்கான புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.