பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

எனக்குக் கதை யோசியுங்கள்: சமூகவலைத்தளங்களில் கசிந்த ரஜினி - இயக்குநர் தேசிங் பெரியசாமி உரையாடல்!

வாழ்த்துகள். எனக்கும் ஒரு கதை தயார் செய்யுங்கள். நிஜமாகவே சொல்கிறேன்.

News image
ரஜினி
Updated On :31 ஜூலை 2020, 6:42 am

DIN

துல்கர் சல்மான், ரிது வர்மா நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் கடந்த பிப்ரவரி 28 அன்று வெளியானது.

இந்நிலையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை ரஜினி பாராட்டியுள்ளார். தன்னிடம் போனில் ரஜினி பாராட்டியது குறித்து ட்வீட் வெளியிட்டுள்ளார் தேசிங் பெரியசாமி. அதில் அவர் கூறியதாவது:

பிரமாதம் அருமை... படம் பார்த்து அசந்துவிட்டேன். வாழ்த்துகள். உங்களுக்குப் பெரிய வருங்காலம் உள்ளது. - காலையில் இருந்து இது மட்டும் தான் காதுல கேட்டுட்டே இருக்கு. பறந்துகிட்டு இருக்கேன். கடவுளுக்கு நன்றி. இந்த நாளுக்காகக் காத்திருந்த அனைவருக்கும் நன்றி என்று எழுதியிருந்தார்.

மேலும் சமூகவலைத்தளங்களில் தேசிங்கு பெரியசாமியுடன் ரஜினி பேசியதன் ஆடியோ வெளியாகியுள்ளது. இத்தனை நாள் படம் பார்க்காமல் இருந்ததற்கு மன்னிக்கவும். மிகவும் தாமதமாகச் சொல்கிறேன். வாழ்த்துகள். எனக்கும் ஒரு கதை தயார் செய்யுங்கள். நிஜமாகவே சொல்கிறேன். யோசித்து வையுங்கள் என்று தேசிங்கு பெரியசாமியிடம் ரஜினி பேசியுள்ளார்.

இதுபற்றி தேசிங் பெரியசாமி ட்வீட் செய்ததாவது: எங்களுடைய உரையாடல் கசிந்ததில் நான் வேதனையடைந்துள்ளேன். இது என்னுடைய தனிப்பட்ட தொலைபேசி அழைப்பு. என்னுடைய ட்வீட்டிலும் தலைவரின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடந்துவிட்டது. எல்லாமே நன்மைக்கே என்று கூறியுள்ளார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.