ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மூன்று முறைதான் திருமணம் செய்துள்ளேன்: பிரபல நடிகை விளக்கம்

3 முறை திருமணம் செய்த பிறகு, இன்னொரு முறை கடைசியாகத் திருமணம் செய்ய ஆசையாக உள்ளதாக பிரபல நடிகை பமீலா ஆண்டர்சன் கூறியுள்ளார்.

News image
Updated On :1 ஜூன் 2020, 8:48 am

3 முறை திருமணம் செய்த பிறகு, இன்னொரு முறை கடைசியாகத் திருமணம் செய்ய ஆசையாக உள்ளதாக பிரபல நடிகை பமீலா ஆண்டர்சன் கூறியுள்ளார்.

ஒரு பேட்டியில் 52 வயது பமீலா ஆண்டர்சன் கூறியதாவது:

மீண்டும் திருமணம் செய்ய விருப்பமா எனக் கேட்கிறீர்கள். கண்டிப்பாக. இன்னும் ஒரே ஒரு முறை. கடவுளே தயவுசெய்து இன்னும் ஒரே ஒரு முறை மட்டும் நான் திருமணம் செய்துகொள்ளவேண்டும்.

என்னுடைய தோல்வியடைந்த கடந்த கால உறவுகளை நினைக்கும்போது நல்லவேளை அப்படி நடந்ததற்காக மகிழ்கிறேன். நான் மூன்று முறை திருமணம் செய்துள்ளேன். ஆனால் நான் ஐந்து முறை திருமணம் செய்துகொண்டதாகப் பலரும் எண்ணுகிறார்கள். ஏனென்று தெரியவில்லை. டாமி லீ, பாப் ரிட்சி, ரிக் சாலமன் என மூவரைத் திருமணம் செய்துள்ளேன். அவ்வளவுதான். இதுவே அதிகம் தான். ஆனால் ஐந்தை விடக் குறைவுதான்.

ஜான் பீட்டர்ஸை நான் திருமணம் செய்துகொள்ளவில்லை. காதல் உணர்வு மிக்கவள் நான். என்னைப் பற்றி அவதூறு பேசுவது மற்றவர்களுக்குச் சுலபமாக உள்ளது. பீட்டர்ஸுடன் நல்ல தருணங்கள் அமைந்து அப்படியே சென்றுவிட்டன என்று கூறியுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.