மும்பை: இந்தக் குழந்தையால் அதைத் தாண்டி வர இயலவில்லை என்று பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் தோனி குறித்த பாலிவுட் படத்தில் நடித்தவரான பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஞாயிறன்று மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் பாலிவுட்டில் மட்டுமல்ல; நாடுமுழுவதும் பரவலாக அதிர்ச்சியலைகளை எழுப்பியுள்ளது.
இந்நிலையில் இந்தக் குழந்தையால் அதைத் தாண்டி வர இயலவில்லை என்று பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
திரையிலகில் அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு மட்டும் ஆதரவாக நடந்து கொள்ளும் போக்கினை எனது சினிமா வாழ்க்கையில் தொடர்ந்து அனுபவித்து வந்திருக்கிறேன். நான் அதிலிருந்து தப்பிப் பிழைத்து விட்டேன். எனது காயங்கள் ஆழமானவை. ஆனால் இந்தக் குழந்தை, சுஷாந்த்தால் அதைத் தாண்டி வர இயலவில்லை. இதிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்வோமா? இதகைய கனவுகள் சிதைவதை தடுத்து நிறுத்த நாம் ஒன்றுபடுவோமா? #கேட்கிறேன்
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். அத்துடன் நிகழ்ச்சி ஒன்றில் பாலிவுட்டில் நிலவும் இத்தகைய போக்குகள் குறித்து சுஷாந்த் சிங் பேசும் விடியோ காட்சியையும் அவர் இணைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல்லை-சென்னை மெமு ரயிலுக்கு பயணிகளிடையே வரவேற்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!

ஜிஎஸ்டி, பூந்தமல்லி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


