சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகும் புதுப்படங்களின் பட்டியல் வெளியீடு!

ஜூலை மாதம் வரை அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகும் படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன...

News image
Updated On :15 மே 2020, 5:36 am

ஊரடங்கு காலத்தில் திரையரங்குகள் இயங்காத நிலையில் திரைப்படங்களை ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியிடும் முயற்சிகள் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகின்றன. ஜூலை மாதம் அமேசான் பிரைமில் வெளியிடப்படும் புதுப்படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

கரோனா தொற்று  பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதுமே மே 17-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளா்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனா். திரையரங்குகளும் இயங்காததால் படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவால் திரையரங்குகளில் படங்கள் வெளியாவது குறித்து தெளிவான நிலை இல்லாததால் நேரடியாக ஓடிடி தளங்களில் படங்களை வெளியிடத் தயாரிப்பாளர்கள் முயன்று வருகிறார்கள்.

Story image

ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படத்தைத் திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முன்பே நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட முயன்ற நடிகர் சூர்யாவுக்கு ஏராளமான தடையை ஏற்படுத்தினார்கள். பெரிய நிறுவனம் தயாரிப்பில் பெரிய நடிகை நடித்த படமொன்று அமேசான் தளத்தில் நேரடியாக வெளியாவதற்குத் திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையைத் தாண்டி பொன்மகள் வந்தாள் படம் அமேசான் தளத்தில் வெளியானால் சூர்யா மற்றும் 2டி நிறுவனம் தொடர்புடைய படங்களை வெளியிட மாட்டோம் எனத் திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பு தனது எதிர்ப்பைப் பலமாகப் பதிவு செய்தது. எனினும் இறுதியில் பொன்மகள் வந்தாள் படம், அமேசான் பிரைம் தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது.

Story image

அதுமட்டுமல்லாமல் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள படங்கள் அமேசான் பிரைம் தளத்தில் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.

அமிதாப் பச்சன், ஆயுஷ்மன் குரானா போன்ற பிரபல நடிகர்கள் நடித்த குலாபோ சிதாபோ (Gulabo Sitabo) என்கிற ஹிந்திப் படம் நேரடியாக அமேசான் பிரைமில் ஜூன் 12 முதல் வெளியாகவுள்ளது. இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஷூஜித் சிர்கார் இயக்கியுள்ளார்.

Story image

இதையடுத்து அமேசான் பிரைமில் வெளியாகும் படங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் ஆகிய இரு தமிழ்ப் படங்களும் நேரடியாக அமேசானில் வெளியாகவுள்ளன. பொன்மகள் வந்தாள் படம் மே 29 அன்றும் பெண்குயின் படம் ஜூன் 19 அன்றும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமிதாப் பச்சன் படம் மட்டுமல்லாமல் பிரபல ஹிந்தி நடிகை வித்யா பாலன் நடித்த சகுந்தலா தேவி உள்ளிட்ட ஜூலை மாதம் வரை அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகும் படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Story image

கணித மேதை என்று புகழப்பட்ட சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு ஹிந்தித் திரைப்படமாக உருவாகியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன், சகுந்தலா தேவி வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இயக்குநர் அனு மேனன், லண்டன் பாரிஸ் நியூயார்க் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் வெளியாகும் தேதி இனிமேல் தான் அறிவிக்கப்படும்.

அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகும் படங்கள்

பொன்மகள் வந்தாள் (தமிழ்) - மே 29
Gulabo Sitabo (ஹிந்தி) - ஜூன் 12
பெண்குயின் (தமிழ்) - ஜூன் 19
லா (கன்னடம்) - ஜூன் 26
பிரெஞ்ச் பிரியாணி (கன்னடம்) - ஜூலை 24
சகுந்தலா தேவி (ஹிந்தி) - தேதி அறிவிக்கப்படவில்லை
Sufiyum Sujatayum (மலையாளம்) - தேதி அறிவிக்கப்படவில்லை

Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.