காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

5000 ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கிய சல்மான் கான்

5000 ஏழைக் குடும்பங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை அளித்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான்.

News image
Updated On :26 மே 2020, 11:13 am

DIN

ரமலான் பண்டிகையை முன்னிட்டு 5000 ஏழைக் குடும்பங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை அளித்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான்.

ரமலான் பண்டிகைக்காகச் செய்யப்படும் ஷீர் குருமாவுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் அடங்கிய பையை 5000 ஏழைக் குடும்பங்களுக்கு அவர் வழங்கியுள்ளார். பீயிங் ஹேங்ரி (Being Haangryy) என்கிற திட்டத்தின் மூலமாக இந்த உதவிகளை செய்துள்ளார். மேலும் மும்பை நகரில் யார் யாருக்கெல்லாம் உணவுப் பொருள்கள் தேவைப்படுகிறதோ அனைவருக்கும் வழங்க வேண்டும் என உணவுப் பொருள்களை எடுத்துச் செல்லும் டிரக்கின் ஓட்டுநர்களுக்கு சல்மான் அறிவுறித்தியுள்ளார்.

கரோனா நெருக்கடியால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள கிராமத்து மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்களை வழங்கி வருகிறார் நடிகர் சல்மான் கான். ஊரடங்கால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக அன்னதானம் சவால் என்கிற முன்னெடுப்பின் மூலம் இந்தக் காரியங்களை அவர் செய்து வருகிறார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரைப்படப் படப்பிடிப்புகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் FWICE என்கிற திரைப்படத் தொழிலாளர் சங்கத்தில் உள்ள 25,000 தொழிலாளர்களுக்கும் சல்மான் கான் உதவியுள்ளார். தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணம் அனுப்பி பலருடைய பாராட்டையும் பெற்றுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.