ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்தியப் பிரபலங்களில் மூன்றாம் இடம்: தீபிகா படுகோனைப் பின்னுக்குத் தள்ளிய ஷ்ரத்தா கபூர்!

இன்ஸ்டகிராம் தளத்தில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையில் இந்திய அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்...

News image
படம் - facebook.com/ShraddhaKapoor
Updated On :3 நவம்பர் 2020, 5:35 am

DIN

இன்ஸ்டகிராம் தளத்தில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையில் இந்திய அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர்.

புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை வெளியிட உகந்த தளமான இன்ஸ்டகிராமில் இந்திய அளவில் விராட் கோலியை அதிக ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள். இன்ஸ்டகிராமில் கோலியை 82.2 மில்லியன் பேரும் அடுத்ததாக பிரியங்கா சோப்ராவை 58.1 மில்லியன் பேரும் பின் தொடர்கிற நிலையில் 3-ம் இடத்துக்கான போட்டியில் தீபிகா படுகோனைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார் பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர்.

ஷ்ரத்தா கபூரை 56.4 மில்லியன் பேரும் தீபிகா படுகோனை 52.3 மில்லியன் பேரும் பின்தொடர்கிறார்கள். பிரதமர் மோடியை 49.7 மில்லியன் பேரும் இந்திய முன்னாள் கேப்டன் தோனியை 30.3 மில்லியன் பேரும் சச்சின் டெண்டுல்கரை 27.1 மில்லியன் பேரும் இன்ஸ்டகிராம் தளத்தில் பின்தொடர்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.