யூடியூப் தளத்தில் 100 கோடி பார்வைகள் என்கிற எண்ணிக்கையை விரைவில் அடையவுள்ளது ரெளடி பேபி பாடல் விடியோ.
தனுஷ் - பாலாஜி மோகன் கூட்டணியில் உருவான படம் - மாரி 2. இதில் சாய் பல்லவி, வரலட்சுமி போன்றோர் நடித்தார்கள். இசை - யுவன் சங்கர் ராஜா. இந்தப் படத்தில் இடம்பெற்ற ரெளடி பேபி பாடலின் விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிக வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, நடன இயக்குநர் பிரபுதேவாவுக்கும் நடிகை சாய் பல்லவிக்கும் அதிகப் பாராட்டுகள் கிடைத்தன.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம், பில்போர்ட் யூடியூப் பட்டியலில் நான்காம் இடம் பிடித்து அசத்தியது. இதனால் சர்வதேச அளவில் இப்பாடலின் விடியோவுக்குக் கவனம் கிடைத்தது. மேலும் யூடியூப் தளத்தில், தமிழ்ப் பாடல்களில் அதிகப் பார்வைகள் பெற்ற பாடல் என்கிற சாதனையையும் அடைந்தது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம், யூடியூப் தளத்தில் ரெளடி பேபி பாடல் 400 மில்லியன் அதாவது 40 கோடி பார்வைகளைப் பெற்று அசத்தியது. இதனால் யூடியூபில் இந்த எண்ணிக்கையைத் தொட்ட முதல் தென்னிந்தியப் பாடல் என்கிற பெருமையையும் அடைந்தது. தனுஷ் - அனிருத் கூட்டணியில் உருவான கொலவெறி பாடலும் சாய் பல்லவியின் முதல் தெலுங்குப் படமான ஃபிடாவில் இடம்பெற்ற வச்சிண்டே பாடலும் முறையே 179 மில்லியன் பார்வைகளும் 196 மில்லியன் பார்வைகளும் அப்போது பெற்றிருந்தன. அந்த எண்ணிக்கைகளைச் சுலபமாகத் தாண்டியது ரெளடி பேபி பாடல்.
கடந்த வருடம் யூடியூபில் அதிக டிரெண்டிங் ஆன விடியோக்களில் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது ரெளடி பேபி பாடல். இதுதவிர உலகளவில் அதிகம் பேர் பார்த்த விடியோக்களில் ரெளடி பேபிக்கு 7-ம் இடம் கிடைத்தது.
ரெளடி பேபி பாடலின் சாதனைகள் இன்னும் தொடர்கின்றன. கடந்த ஜூலை மாதம், யூடியூபில் 900 மில்லியன் அதாவது 90 கோடி பார்வைகள் இதற்குக் கிடைத்தன. இந்நிலையில் 100 கோடி பார்வைகள் என்கிற சாதனை எண்ணிக்கையை நெருங்கி வருகிறது. தற்போது இன்றுவரை இப்பாடலுக்கு 990,662,700 பார்வைகள் கிடைத்துள்ளன. இதனால் விரைவில் 100 கோடி பார்வைகள் கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் வேட்புமனு தாக்கல்

தனித் தொகுதி வேட்பாளா்கள் குறித்த அா்ஜூன் சம்பத் மனு: இன்று விசாரணை

வேன் மீது பைக் மோதிய விபத்தில் இருவா் உயிரிழப்பு

முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கத்தின் சொத்து மதிப்பு ரூ. 2.94 கோடி
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


