புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மாஸ்டர் டீசர் எப்போது?: இன்று வெளியாகவுள்ள அறிவிப்பு

மாஸ்டர் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்கிற தகவலை படக்குழு இன்று அறிவிக்கவுள்ளது.

News image
Updated On :12 நவம்பர் 2020, 8:22 am

DIN

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்கிற தகவலை படக்குழு இன்று அறிவிக்கவுள்ளது.

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார் விஜய். மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசை - அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக இயங்கவில்லை. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் படத்தின் டீசருக்காக ரசிகர்கள் ஆவலாகக் காத்திருக்கிறார்கள். இதையடுத்து தீபாவளி சமயத்தில் மாஸ்டர் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மாஸ்டர் டீசர் எப்போது வெளியாகும் என்கிற தகவலை படக்குழு இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.