ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வி.பி.எஃப். கட்டணத்திலிருந்து முழு விலக்கு: தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவர் முரளி உறுதி

வி.பி.எஃப். கட்டணத்தைச் செலுத்துவதிலிருந்து முழுமையான விலக்கு கேட்கவுள்ளோம்.

News image
படம் - twitter.com/TFPCprnews
Updated On :23 நவம்பர் 2020, 10:51 am

DIN

வி.பி.எஃப். கட்டணத்தைச் செலுத்துவதிலிருந்து முழுமையான விலக்கு கேட்கவுள்ளோம் என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேனாண்டாள் முரளி கூறியுள்ளார்.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளா் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோ்தல் நடைபெறுவது வழக்கம். கடந்த முறை நிா்வாகப் பொறுப்பில் இருந்த விஷால் தலைமைக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இதையடுத்து உயா்நீதிமன்ற அறிவுறுத்தலின் படி புதிய நிா்வாகிகளைத் தோ்வு செய்யும் தோ்தல் சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆா். ஜானகி கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தலைவா் பதவியைக் கைப்பற்ற டி.ராஜேந்தா் தலைமையிலான அணியும், ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ என்.ராமசாமி என்கிற முரளி ராம.நாராயணன் தலைமையிலான மற்றொரு அணியும் களத்தில் இருந்தன. பி.எல்.தேனப்பன் தலைவா் பதவிக்கு மட்டும் தனித்துப் போட்டியிட்டாா். பொருளாளா் பதவிக்கு ஜே.எஸ்.கே. சதீஷ்குமாா் தனித்துக் களத்தில் இருந்தாா். துணைத் தலைவா்கள் பதவிக்கு சிவசக்தி பாண்டியன், பி.டி.செல்வகுமாா், ஆா்.கே.சுரேஷ் உள்ளிட்டோா் போட்டியிட்டனா். இரு அணிகளைத் தவிா்த்து 21 செயற்குழு உறுப்பினா்கள் பதவிக்கென தனியாக கமலக்கண்ணன், ஜெமினி ராகவா உள்ளிட்டோா் களம் கண்டனா்.

நேற்று காலை 8 மணி முதல் நடைபெற்ற வாக்குப் பதிவில் கமல், அா்ஜூன், சமுத்திரக்கனி, சிவகாா்த்திகேயன், குஷ்பு, தேவயானி உள்ளிட்ட பலா் வாக்களித்தனா். ரஜினிகாந்த், பாரதிராஜா, ஏ.வி.எம் சரவணன், எஸ்.பி.பி. சரண் உள்ளிட்டோா் வாக்களிக்கவில்லை. மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 1304 ஆகும். இதில் 1050 வாக்குகள் பதிவாகின. கடும் கட்டுப்பாடுகளை விதித்துத் தோ்தலைக் கண்காணித்தாா் ஓய்வு பெற்ற நீதிபதி எம்.ஜெயச்சந்திரன்.

வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கின. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனத்தைச் சேர்ந்த முரளி வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நடிகரும் இயக்குநருமான டி. ராஜேந்தர், பி.எல்.தேனப்பன் ஆகியோர் தோல்வியடைந்துள்ளார்கள். முரளிக்கு 557 வாக்குகளும் டி. ராஜேந்தருக்கு 337 வாக்குகளும் தேனப்பனுக்கு 87 வாக்குகளும் கிடைத்துள்ளன.  துணைத் தலைவராக ஆர்.கே. சுரேஷ் தேர்வாகியுள்ளார்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி பேசியதாவது:

வெளிவராமல் உள்ள படங்களை வெளியிட முதற்கட்டமாக முயற்சி செய்வேன். குறுகிய காலத்திலும் நீண்ட நாள் நோக்கிலும் செய்ய வேண்டிய காரியங்கள் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். 

வி.பி.எஃப். கட்டணத்தைச் செலுத்துவதிலிருந்து முழுமையான விலக்கு கேட்கவுள்ளோம். எங்கள் தேர்தல் அறிக்கையிலும் அதுதான் சொல்லியிருக்கிறோம். இதுகுறித்த பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்குவோம். ஏனெனில் படங்கள் வெளியாகத் தயாராக உள்ளன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.