ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த தனுஷ் - அனிருத்: அதிகாரபூர்வ அறிவிப்பு
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள தனுஷின் 44-வது படத்துக்கு...


2011-ல் தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத்.
இதன்பிறகு வேலையில்லா பட்டதாரி, மாரி, தங்கமகன் போன்ற படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றினார்கள். எனினும் 2015-க்குப் பிறகு தனுஷ் நடித்த படங்களுக்கு அனிருத் இசையமைக்கவில்லை.
இந்நிலையில் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள தனுஷின் 44-வது படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதற்கான அறிவிப்பு, அனிருத்தின் பிறந்த நாளான இன்று வெளியாகியுள்ளது. இயக்குநர், கதாநாயகி உள்ளிட்ட இதர விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. எனினும் இப்படத்தை மித்ரன் ஜவஹர் இயக்குவார் என அறியப்படுகிறது.
அனிருத் இசையமைப்பில் இந்த வருடம் தர்பார் படம் வெளியானது. விரைவில் வெளிவரவுள்ள மாஸ்டர் படத்துக்கும் அவர் இசையமைத்துள்ளார். மேலும் இந்தியன் 2, டாக்டர், காத்து வாக்குல ரெண்டு காதல், விக்ரம் - துருவ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம், கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம், தனுஷின் 44-வது படம் அனிருத் கையில் பிரபலங்களின் படங்கள் ஏராளமாக உள்ளன.
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ஜகமே தந்திரம் படம் விரைவில் வெளிவரவுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்துள்ள தனுஷ், அத்ராங்கி ரே என்கிற ஹிந்திப் படத்திலும் நடித்து வருகிறார். இதன்பிறகு கார்த்திக் நரேன் படத்திலும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...