ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ள லக்ஷ்மி பாம் என்கிற ஹிந்திப் படத்தின் பெயர் லக்ஷ்மி என மாற்றப்பட்டுள்ளது.
2011-ல் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா படம் லக்ஷ்மி பாம் என்கிற பெயரில் ஹிந்திப் படமாக உருவாகியுள்ளது. ராகவா லாரன்ஸ் - அக்ஷய் குமார் முதல்முறையாக இணைந்துள்ளார்கள். கதாநாயகியாக கியாரா அத்வானி நடித்துள்ளார்.
இந்தப் படம் மே 22 அன்று வெளிவருவதாக இருந்தது. ஆனால் தற்போதைய சூழலில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகவுள்ளதாகக் கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. பாலிவுட்டில் அனைவரும் எதிர்பார்த்த ஒரு படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாவது திரையுலக வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
நவம்பர் 9 அன்று முதல் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகவுள்ள இப்படத்தின் பெயர் லக்ஷ்மி என மாறியுள்ளது. லக்ஷ்மி பாம் என்கிற தலைப்பு மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகப் புகார்கள் எழுந்த நிலையில் தணிக்கை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் லக்ஷ்மி என மாற்றப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லருக்கு யூடியூப் தளத்தில் 24 மணி நேரத்தில் 70 மில்லியன் பார்வைகள் கிடைத்தன. இந்தியாவில் இந்த எண்ணிக்கையைப் பெற்ற முதல் படம் என்கிற பெருமையைப் பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் வாக்கு சேகரித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் - புகைப்படங்கள்
குவைத்தில் போர்நிறுத்தத்தை மீறி ஈரான் தாக்குதல்: எண்ணெய் வளாகங்கள், மின் நிலையங்கள் பலத்த சேதம்!

ஐபிஎல் 2026: மும்பையை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி - புகைப்படங்கள்

சவுக்கு சங்கர் ஆந்திரத்தில் கைது!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


