திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

திருச்சியில் எஃப்.எம்.ஜி.ஈ. மருத்துவத் தேர்வை எழுதிய பிரபல நடிகை சாய் பல்லவி (படங்கள்)

இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்றுவதற்கான எஃப்.எம்.ஜி.ஈ. தேர்வை எழுதியுள்ளார் பிரபல நடிகை சாய் பல்லவி.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:14 pm

DIN

இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்றுவதற்கான எஃப்.எம்.ஜி.ஈ. தேர்வை எழுதியுள்ளார் பிரபல நடிகை சாய் பல்லவி.

வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்து இந்தியாவுக்கு வரும் மாணவர்கள், இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்ற வேண்டும் என்றால் எஃப்.எம்.ஜி.ஈ. (FMGE- Foreign Medical Graduate Examination) தேர்வை எழுதி வெற்றி பெற வேண்டும். ரஷியா, சீனா, வங்கதேசம், பிலிப்பைன்ஸ், ஜார்ஜியா போன்ற நாடுகளில் மருத்துவப் படிப்பை முடித்தவர்கள் இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்ற வேண்டும் என்றால் இத்தேர்வைக் கட்டாயம் எழுத வேண்டும். அதேசமயம் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் மருத்துவப் படிப்பை முடித்தவர்கள் இத்தேர்வை எழுதத் தேவையில்லை.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் மாதம் நடைபெறுவதாக இருந்த இந்தத் தேர்வு கடந்த ஆகஸ்ட் 31 அன்று நடைபெற்றது. 

2016-ல் ஜார்ஜியா நாட்டில் மருத்துவம் பயின்ற பிரபல நடிகை சாய் பல்லவி, திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற எஃப்.எம்.ஜி.ஈ. தேர்வில் பங்கேற்றார். அப்போது, சக தேர்வர்கள், சாய் பல்லவியை அடையாளம் கண்டு அவரிடம் சிறிது நேரம் பேசி புகைப்படங்களை எடுத்துக்கொண்டார்கள். இப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.