புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

தேசிய விருது பெற்ற இயக்குநரை விரைவில் மணக்கிறார் நடிகை அனுஷ்கா?

தேசிய விருது பெற்ற இயக்குநரை நடிகை அனுஷ்கா காதல் திருமணம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
Updated On :4 மார்ச் 2020, 6:31 am

பாகுபலி நட்சத்திரம் பிரபாஸைக் காதலிக்கிறார் என்று முதலில் செய்திகள் வெளியாகின. பிறகு கிரிக்கெட் வீரரைக் காதலிக்கிறார் எனவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தேசிய விருது பெற்ற இயக்குநரை நடிகை அனுஷ்கா காதல் திருமணம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பை ஊடகங்களில் வெளியான தகவலின்படி, இஞ்சி இடுப்பழகி படத்தை இயக்கிய பிரகாஷ் கோவலமுடியைத் திருமணம் செய்ய அனுஷ்கா திட்டமிட்டுள்ளார் எனத் தெரிகிறது. 

பிரகாஷ் கோவலமுடி 2004-ல் இயக்கிய பொம்மலடா படம், சிறந்த தெலுங்குப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. இவர், மூத்த தெலுங்கு இயக்குநர் ராகவேந்திர ராவின் மகன். இஞ்சி இடுப்பழகி (தெலுங்கில் சைஸ் ஜீரோ) படப்பிடிப்பின்போதுதான் அனுஷ்கா - பிரகாஷ் இடையே காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது. பாலிவுட் திரைக்கதை ஆசிரியர் கனிகா தில்லானை 2014-ல் திருமணம் செய்துள்ளார் பிரகாஷ். எனினும் 3 வருடத் திருமண வாழ்க்கைக்குப் பிறகு இருவரும் பிரிந்து வாழ்வதாகச் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் அனுஷ்கா - பிரகாஷ் இடையிலான காதல் திருமணம் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.