புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

2 வாரத்தில் ரூ. 10 கோடி வசூல் சாதனை: திரெளபதி பட இயக்குநர் பெருமிதம்

சமீபத்தில் வெளியான திரெளபதி படம் முதல் 2 வாரங்களில் ரூ. 10 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக அப்படத்தின் இயக்குநர் மோகன் ஜி. ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :6 மார்ச் 2020, 12:09 pm

ரிஷி ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ் நடிப்பில் மோகன் ஜி. இயக்கியுள்ள படம் - திரெளபதி. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. நாடகக் காதல் குறித்து படத்தின் மையக்கதை உருவாக்கப்பட்டுள்ளதால் டிரெய்லரில் உள்ள பல வசனங்கள் சமூகவலைத்தளங்களில் விவாதங்களை உருவாக்கியது. 

இந்நிலையில் சமீபத்தில் வெளியான திரெளபதி படம் முதல் 2 வாரங்களில் ரூ. 10 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக அப்படத்தின் இயக்குநர் மோகன் ஜி. ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

300 திரையரங்குகளில் இரண்டாவது வாரம் தொடர்கிறது... இதுவரை ரூ. 10 கோடிக்கு மேல் மொத்தமாக வசூல் சாதனை புரிந்துள்ளது. சிறு குழு கொண்ட தமிழின் முதல் கூட்டு முயற்சித் திரைப்படத்தை இவ்வளவு பெரிய வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவு கொடுங்கள் என்று கூறியுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.