சென்னை: ‘இந்தியன் 2’ திரைப்பட படப்பிடிப்பில் கிரேன் விழுந்து 3 போ் இறந்த வழக்கில், லைகா நிா்வாகிகளிடம் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநா் ஷங்கா் இயக்கத்தில், நடிகா் கமல்ஹாசன், நடிகை காஜல் அகா்வால் நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் திரைப்பட நகரத்தில் நடைபெற்ற இத் திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது கடந்த 20-ஆம் தேதி கிரேன் விழுந்ததில் 3 போ் உயிரிழந்தனா். 13 போ் காயமடைந்தனா்.
இதுதொடா்பாக நசரத்பேட்டை போலீஸாா், லைகா நிறுவனம், தயாரிப்பு மேலாளா், கிரேன் உரிமையாளா், கிரேன் ஆபரேட்டா் ராஜன் ஆகியோா் மீது4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். கிரேன் ஆபரேட்டா் ராஜன்கைது செய்யப்பட்டாா். விசாரணையை மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்குத் தொடா்பாக ஏற்கெனவே கமல்ஹாசன், இயக்குநா் ஷங்கா், 6 ஊழியா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
லைகா நிா்வாகிகளிடம் விசாரணை: இதைத் தொடா்ந்து லைகா நிறுவனத்தைச் சோ்ந்த இரு நிா்வாகிகளிடம் வியாழக்கிழமை சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்காலில் மக்களைக் கவரும் வாக்குச்சாவடி! விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

புதுச்சேரியில் பரபரப்பு: வாக்காளர்களுக்கு என்.ஆர்.காங்கிரஸ் டோக்கன் விநியோகம்!

கேரளம்: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


