தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ரஜினிகாந்த்: தமிழ்நாட்டிலிருந்து தாதாசாகேப் பால்கே விருதைப் பெறும் 4-வது திரைப்படக் கலைஞர்!

பால்கே விருதை பெறும் 4-வது தமிழ்த் திரைப்படக் கலைஞர் என்கிற பெருமையை ரஜினிகாந்த் பெற்றுள்ளார். 

News image
Updated On :1 ஏப்ரல் 2021, 9:05 am

DIN

தாதாசாகேப் பால்கே விருதை பெறவுள்ள 4-வது தமிழ்த் திரைப்படக் கலைஞர் என்கிற பெருமை ரஜினிகாந்த்துக்குக் கிடைத்துள்ளது.  

திரைத் துறையில் தன்னிகரற்ற சேவையாற்றி வரும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தியத் திரை உலகினருக்குக் கிடைக்கும் கெளரவச் சின்னமாகவும், வாழ்நாள் அங்கீகாரமாகவும் இவ்விருது கருதப்படுகிறது.

சத்யஜித் ரே, பிருத்விராஜ் கபூர், நாகிரெட்டி, எல்.வி. பிரசாத், ராஜ்கபூர், லதா மங்கேஷ்கர், சிவாஜி கணேசன், கே. பாலசந்தர்,  கே. விஸ்வநாத் உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்கள் பலரின் புகழுக்கு தாதா சாகேப் விருது மேலும் பெருமை சேர்த்துள்ளது.

கடைசியாக 2018-ல் பிரபல நடிகர் அமிதாப் பச்சனுக்கு பால்கே விருது அளிக்கப்பட்டது. 

இந்நிலையில் 2019-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியத் திரைத்துறையில் ரஜினியின் சாதனையைப் பாராட்டி இந்த விருது அவருக்கு வழங்கப்படவுள்ளது.

1982-ல் எல்.வி. பிரசாத் பால்கே விருதைப் பெற்றார். 1996-ல் சிவாஜி கணேசனுக்கும் 2010-ல் கே.பாலசந்தருக்கும் இந்த விருது அளிக்கப்பட்டது.

இதையடுத்து பால்கே விருதைப் பெறவுள்ள 4-வது தமிழ்த் திரைப்படக் கலைஞர் என்கிற பெருமை ரஜினிகாந்த்துக்குக் கிடைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.